பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி நிறுத்த செய்தி குறித்து அசோசியேட் பிரஸ் நிறுவனம் அணுகிய போது பதில் அளிக்கவில்லை.