நாட்டின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 16.7 சதவீதம் உயர்ந்து ரூ.2,014 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் ரூ.1,726 கோடியாக இருந்தது. வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.11,519 கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான வருமான எதிர்பார்ப்பு 12 முதல் 14 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் வருமான எதிர்ப்பார்ப்பை குறைவாக தெரிவித்திருக்கும் நிலையில் இரட்டை இலக்க வருமான எதிர்பார்ப்பை அறிவித்திருக்கிறது ஹெச்சிஎல் டெக்.
புதிய சிஇஒ
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஆனந்த் குப்தா வெளியேறியதை அடுத்து தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சிஒஒ) இருந்த சி.விஜயகுமார் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருக்கிறார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஹெச்சிஎல் தெரிவித்திருக்கிறது.
இந்த காலாண்டில் 12 வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. செப்டம்பர் 30-ம் தேதி வரை ரூ.1,242.80 கோடி ரொக்கமாக இருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்குவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த காலாண்டில் 9,083 பணியாளர்களை புதிதாக எடுத்திருக்கிறது. மொத்தம் 1,09,795 பணியாளர்கள் உள்ளனர். வெளியேறுவோர் விகிதம் 18.6 சதவீதமாக இருக்கிறது.
கையகப்படுத்தல்
அமெரிக்காவை சேர்ந்த பட்லர் அமெரிக்கா ஏரோஸ்பேஸ் நிறுவ னத்தை 8.5 கோடி டாலர் தொகைக்கு ஹெச்சிஎல் டெக்னாலஜி வாங்கி இருக்கிறது. 900 பணியாளர்களுடன் அமெரிக்காவில் 7 வடிவமைப்பு மையங்கள் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த இணைப்பு முழுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்செல்க்ஸ்
இந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் குப்தா டெக்செல்க்ஸ் என்னும் முத லீட்டு நிறுவனத்தை தொடங்கி இருக் கிறார். ரூ.100 கோடியில் தொடங்கப் பட்டிருக்கும் இந்த நிறுவனம் புதிய தொழில்நுட்ப நிறுவனங் களில் முதலீடு செய்யும். தொழில் முனைவை ஊக்குவிக்க இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருப்ப தாக ஆனந்த் குப்தா தெரிவித்தார். ரூ.50 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை முதலீடு செய்ய இந்த நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.