இணையத்தின் மூலம் திரைப்படங்கள் தொலைக்காட்சி நாடகங்களை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான நெட்பிலிக்ஸின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 1997-ம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பியூர் அட்ரியா சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
டெக்னாலஜி நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
சார்ட்டர் பண்ட் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2011-ம் ஆண்டிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்.எஸ் பட்டம் பெற்றவர்.
2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நிர்வாகக் குழுவில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.