இந்தியாவின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 8.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக் காவில் நடக்கும் தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ஆகிய காரணங்களால் நிகர லாபம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பைவிட நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 8.8 சதவீதம் உயர்ந்து 6,586 கோடி ரூபாயாக இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,073 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 4.3 சதவீதம் உயர்ந்திருக் கிறது. கடந்த ஜூன் காலாண்டில் ரூ.6,317 கோடியாக நிகர லாபம் இருந்தது. இந்த காலாண்டில் வருமானம் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.29,284 கோடியாக இருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என். சந்திர சேகரன் கூறும் போது, வழக் கத்துக்கு மாறான காலாண்டு இது. நிச்சயமற்ற சூழல் உருவாகி இருப்பதால் வாடிக்கையாளர் கள் தங்களது முதலீடுகளை குறைத்துக்கொண்டுள்ளனர். தவிர இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் மந்தமான வளர்ச்சியும் இருந்துள்ளது. இருந் தாலும் நிகர லாப அடிப்படையில் இது சிறந்த காலாண்டு என்று கூறினார்.
நிறுவனத்தில் இருந்து வெளி யேறுவோர் விகிதம் 11.9 சதவீதமாக இருக்கிறது. பணியாளர் களின் எண்ணிக்கை 3,71,519 ஆக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 2.17 சதவீதம் சரிந்து 2,328 ரூபாயில் வர்த்தகமானது.