இந்தியாவில் செல்போன் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 100 கோடியை எட்டும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
``மொபைல் பொருளாதாரம்: இந்தியா 2016’’ - என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வில் மொபைல் உபயோகம் மிக வேகமான வளர்ச்சியை எட்டி வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் செல்போன் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை 61.60 கோடியாக உள்ளது. சர்வ தேச அளவில் அதிக வாடிக்கை யாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக அந்த ஆய் வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உபயோகத்தில் அமெரிக்காவை விட அதிக எண் ணிக்கையிலானோர் இந்தியாவில் உள்ளனர். தற்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளரின் எண்ணிக்கை 27.50 கோடியாகும்.
செல்போன்களின் விலை சரிந்து வருவது, இத்துறையில் ஈடு படும் செல்போன் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்வதன் மூலம் நெட்வொர்க் அதிக அளவில் விரிவடைவது உள்ளிட்ட காரணங் களால் அடுத்த 4 ஆண்டுகளில் 33 கோடி வாடிக்கையாளர்கள் இதில் இணைவர் என்று அறிக்கை கணித்துள்ளது.
செல்போன் உபயோகிப்பாளரின் நுகர்வு விகிதம் கடந்தஆண்டில் 47 சதவீதமாக இருந்தது. இது 2020-ம் ஆண்டில் 68 சதவீதமாக உயரும் என கணித்துள்ளது.
3-ஜி மற்றும் 4-ஜி சேவை கிடைப் பது மற்றும் தொழில்நுட்ப மாற்றங் கள் காரணமாக ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளரின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 67 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேசமயத்தில் இத் துறையினர் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய மும் உள்ளது. 2016 முதல் 2020 வரையான காலத்தில் இத் துறையைச் சேர்ந்தவர்கள் 3,400 கோடி டாலரை முதலீடு செய்வர் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ள இந்த அறிக்கை, அனைவருக்கும் இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்யும் அரசின் திட்டம் வெற்றியடையும் என்றும் அந்த அளவுக்கு இந்தியாவில் மொபைல் பொருளாதாரம் மிகச் சிறப்பான எதிர்காலத்தைக் கொண்டிருப் பதாக தெரிவித்துள்ளது.