2017-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 5% அளவைக் காட்டிலும் பணவீக்க அளவு குறைவாக இருக்கும் என்று ஹெச்எஸ்பிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நிதி நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியாவின் பண வீக்க நிலவரம் குறித்து மேற் கொண்ட ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பருவ மழை எதிர்பார்த்த அளவு இருப் பதால் உணவுப் பொருள்களின் வரத்து அதிகரிக்கும். இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் பண வீக்கம் 4.5% அளவுக்குக் குறையும். பருப்பு வகைகளின் உற்பத்தி அதி கரிப்பால் பணவீக்கத்தில் 40 புள்ளி கள் வரை குறைய வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி 2017-ம் ஆண்டுக்கு நிர்ணயித்துள்ள இலக்கானது 5 சத வீதமாகும். இதைவிட குறையும் பட்சத்தில் கடனுக்கான வட்டி விகி தம் அரை சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது என்ற ஹெச்எஸ்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பின்போது தலா 25 புள்ளிகள் (கால் சதவீதம்) வட்டிக் குறைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி கண்காணிப்புக் குழு (எப்எம்சி) அமைக்கப்பட்டபிறகு முதலாவது நிதிக் கொள்கை அறிவிப்பு அக்டோபர் 4-ம் தேதி நிகழ உள்ளது. ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்ற பிறகு நடைபெற உள்ள முதலாவது நிதிக் கொள்கை கூட்டம் இதுவாகும். நிதி கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து நிதிக் கொள்கையை ஆர்பிஐ அறிவிக்க உள்ளது. இதில் மாற்றத்துக்கான வாய்ப்புக் குறைவு என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
அக்டோபர் மாத நிதிக் கொள் கையின்போது பொதுத்துறை வங்கிகளின் பணப் புழக்கத்தை அதிகரிக்க அரசு முதலீடு செய்யும் என்றும் அதற்காக அரசு பத்திர வெளி யீடு மற்றும் டாலர்களை வாங்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்கக் கூடும் என்றும் தெரிகிறது.
2017-ம் ஆண்டின் பிற்பாதியில் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பிற காரணிகளால் பண வீக்கம் அதிகரிக்கும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதனால் அடுத்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் கடனுக்கான வட்டி மேலும் கால் சதவீதம் குறைக்கப்படலாம் என்று ஹெச்எஸ்பிசி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.