தங்களிடம் இருக்கும் தங்கத்தை ரொக்க கையிருப்பு விகிதமாகவோ (சி.ஆர்.ஆர்) அல்லது எஸ்.எல்.ஆர்-ஆகவோ ரிசர்வ் வங்கி கருதலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மும்பையில் நடந்த ஜூவல்லரி ஏற்றுமதி சங்கத்தின் கூட்டத்தில் தெரிவித்தார்.
தங்கத்தை இருப்பு வைத் திருப்பதால் எந்தவிதமான கூடுதல் பயனும் கிடைக்காது. இதை சி.ஆர்.ஆர். அல்லது எஸ்.எல்.ஆர்- ஆக ரிசர்வ் வங்கி கருதலாம் என்றார்.
நடப்பு கணக்கு பற்றாக் குறையால் தங்க இறக்கு மதிக்கு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. அதனால் உள்நாட்டில் பயன்படுத்தப் படாமல் இருக்கும் தங்கத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தங்க டெபாசிட் திட்டத்தின் மூலம் அதிக அளவு தங்கம் எஸ்.பி.ஐ.யிடம் இருக்கிறது. ஆனால் இந்த மொத்த டெபாசிட்டையும் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த முடியவில்லை என்றார். மேலும் புதிதாக தங்க டெபாசிட் வாங்குவதில் வங்கிக்கு எந்த ஆதாயமும் இல்லை என்றார்.
தற்போதைய நிலையில் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாக இருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கி எந்த வட்டியும் கொடுப்பதில்லை. மேலும் எஸ்.எல்.ஆர். விகிதம் 22.5 சதவீதம் வைத்திருக்க வேண்டி இருக்கிறது. (எஸ்எல்ஆர் என்பது வங்கிக்கு கிடைக்கும் டெபாசிட்களில் அரசு பத்திரங்கள் மற்றும் எளிதில் பணமாக்க கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்பட வேண்டிய விகிதம்) இதே கருத்தை பேங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ்.முந்திராவும் தெரிவித்தார். வங்கியிடம் இருக்கும் தங்கத்தை எஸ்.எல்.ஆர். அல்லது சி.ஆர்.ஆர்-ஆக கருதுவது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
தற்போதைய நிலைமையில் இரண்டு வங்கியிடம் இருக்கும் தங்கத்தின் அளவு தெரியவில்லை. இந்த நிகழ்ச் சியில், நிதிச் சேவைகள் பிரிவின் செயலாளர் ஜி.எஸ். சாந்துவும் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, எந்தெந்த வழியில் தங்கத்தை பயன்படுத் துவது என்பது குறித்து பல இடங்களில் இருந்து நிதி அமைச்சகத்துக்கு ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
தங்க இறக்குமதியை குறைக்க பொதுமக்கள் உதவ வேண்டும். தங்கம் இறக்குமதியால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என்றார்.