வணிகம்

இவரைத் தெரியுமா?- ரோகித் கபூர்

செய்திப்பிரிவு

நொய்டாவைச் சேர்ந்த வெளிப் பணி ஒப்படைப்பு நிறுவனமான (பிபிஓ) இஎக்ஸ்எல் நிறுவனத்தின் இணை நிறுவனர்.

நிறுவனத்தின் துணைத் தலை வர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக 2012-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

டாயிஷ் வங்கியின் பிசினஸ் ஹெட் பொறுப்பிலும் பேங்க் ஆப் அமெரிக்காவில் துணைத்தலைவராகவும் இருந்தவர்.

சிஏ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாஸ்காம் பிபிஎம் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார்.

நெஸ்ட்லே நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

புதுடெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பிடெக் பட்டம் பெற்றவர். அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT