மத்திய அரசு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்து வதில் தீவிரமாக உள்ளது. ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன் சிலின் முதலாவது கூட்டம் மிகவும் சுமூகமாக நடைபெற்றதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற ஆலோ சனைக் குழுவின் கூட்டத்தில் பேசிய ஜேட்லி, ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்குத் தேவை யான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
செப்டம்பர் 16, 2017- அன்று அரசியல் சாசன (101-வது பிரிவு) சட்டம் 2016 அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகி செயல்முறைக்கு வரும். இதன்படி மத்திய அரசுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வரி விதிக்கும் அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதைப்போல அரசியல் சாசன அமலாக்க சட்டம் மாநில அரசுகளும் செப்டம்பர் 16, வரையில் மதிப்பு கூட்டு வரி (வாட்) அல்லது விற்பனை வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண் டாவது கூட்டம் வெள்ளி, சனிக் கிழமைகளில் நடக்கிறது. அப் போது வரி விதிப்புக்கான அளவு, எந்தெந்தப் பொருள்களுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆராயப்படும்.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் ஜிஎஸ்டி-யை சிறப்பாக அமல் படுத்துவது தொடர்பாக சில ஆலோசனைகளை அளித்தனர். அதில் குறிப்பாக வரி வசூலில் வெளிப்படைத் தன்மை கட்டாய மாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். அத்துடன் எங்கு வரி வசூலிக்கப்படுகிறது, மேல் முறையீடு எங்கு செய்யலாம் என்பது குறித்த விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் அளிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட வேண்டும், குறிப்பாக சிறு வணிகர்கள் மத்தியில் நடத்தப் பட வேண்டியது மிகவும் முக்கியம் என சில உறுப்பினர்கள் ஆலோ சனை அளித்தனர். ஜிஎஸ்டி-முறை யில் பதிவு செய்வது, வரித் தாக்கல் செய்வது தொடர்பாக விழிப் புணர்வு மிக அவசியம் என கூறப்பட்டது.
நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் ஜிஎஸ்டி முறை சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சில உறுப்பினர் கள் ஆலோசனை கூறினர்.
சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி-யில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும், எந்தெந்த பொருள்களின் விலை ஜிஎஸ்டி-யால் குறையும் என்பதையும் தெரி விக்க வேண்டும் எனவும் ஆலோ சனை கூறப்பட்டது.