புதுடெல்லி: ரூ.5 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளே சட்டப்படி இனி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்ச கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி விசாரணை பிரிவு மேலும் கூறியதாவது:
ரூ. 5 கோடிக்கும் மேலான உள்ளீட்டு வரி வரவை தவறாக பயன்படுத்துதல் அல்லது வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக ஜிஎஸ்டி அதிகாரிகளே இனி சட்டப்பூர்வமாக வழக்கு தொடரலாம். இருப்பினும், விசாரணையின்போது கைது செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் வழக்கமாக வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு இந்த பண வரம்பு பொருந்தாது.
விசாரணை பிரிவு அறிவிப்பு
வழக்கு தொடர வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்த பிறகே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜிஎஸ்டி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.