வணிகம்

ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.10.73 லட்சம் கோடி பரிவர்த்தனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை ரூ.10.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் அது ரூ.10.63 லட்சம் கோடியாக இருந்தது.

மொத்தமாக ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஜூலையில் அது 628 கோடியாக இருந்தது. இந்தியாவில் 2016-ம் ஆண்டு யுபிஐ நடைமுறைக்கு வந்தது. இணைய வசதி, ஸ்மார்ட்போன் புழக்கம் பரவலானதையடுத்து மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நகரத் தொடங்கினர். கரோனாவுக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை பல மடங்கு வேகம் காணத் தொடங்கியது.

2019 அக்டோபரில் யுபிஐ வழியான பரிவர்த்தனை முதன் முறையாக 100 கோடியைக் கடந்தது. 2020 அக்டோபரில் அது 200 கோடியைக் கடந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 628 கோடியாக உயர்ந்து உச்சம் தொட்டது.

SCROLL FOR NEXT