வணிகம்

குடும்பத் தொழில்களின் போக்குகள் குறித்து உச்சி மாநாடு

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் குடும்ப ரீதியாக நடத்தப்படும் தொழில்களின் போக்குகள் குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் உச்சி மாநாட்டை நடத்துகிறது.

இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னகப் பிரிவு கூறுகையில், “இந்தியாவில் குடும்ப ரீதியாக நடத்தப்படும் தொழில்கள் எப்படி இருக்கின்றன, தற்போதைய காலமாற்றத்துக்கு ஏற்ப என்ன வகையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, என்ன விதமான சவால்கள் உருவாகி உள்ளன, அவற்றை எதிர் கொள்வது எப்படி என்பது குறித்து பல்வேறு தொழில்துறையினர் இந்த மாநாட்டில் உரையாட உள்ளனர்.

வெளிநாட்டினர் பங்கேற்பு

உலக அளவில் குடும்ப தொழில்களில் என்ன விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, அவற்றுக்கும் இந்தியாவில் பின்பற்றப்படும் நடைமுறைக்குமான வேறுபாடுகள் என பல கோணங்களில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. வெளிநாட்டு தொழில்முனைவோர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டுதங்களை அனுபவங்களைப் பகிர உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT