புதுடெல்லி: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செப்.1) முதல் தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,885 ஆக உள்ளது.
கொல்கத்தாவில் ரூ.1995.50க்கும், மும்பையில் ரூ.1,844 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 96 ரூபாய் குறைந்துள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5வது முறையாக குறைப்பு: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 5 மாதங்களாக தொடர்ச்சியாக குறைக்கப்பட்டுள்ளது. மே மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.2354 ஆக உச்சம் தொட்டது. அதன் பின்னர் ஜூன் மாதம் ரூ.2,219 ஆகக் குறைந்தது. ஜூலையில் மேலும் ரூ.98 குறைந்து ரூ.2021 ஆனது. ஆகஸ்டில் ரூ.1976.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று மேலும் குறைந்துள்ளது.
அதேவேளையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கான விலையில் மாற்றம் ஏதுவும் செய்யப்படவில்லை.