தொழிலதிபர் விஜய் மல்லையா விற்குச் சொந்தமான சொகுசு பங் களா நேற்று ஏலத்திற்கு வந்தது. இணையத்தின் மூலமாக நடை பெற்ற இந்த ஏலத்தில் எந்தவொரு நபரும் சொகுசு பங்களாவை ஏலம் கேட்க முன்வரவில்லை.
கோவாவில் உள்ள இந்த பங்களா வின் ஏல கேட்பு மதிப்பு ரூ.85.29 கோடி யாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பாரத ஸ்டேட் வங்கி இந்த ஏலத்தை நடத்தியது.
ஏலம் கேட்க யாரும் முன்வராத தால் சொகுசு பங்களாவை ஏலம் விடுவது தோல்வியில் முடிந்துவிட் டது. ஏல கேட்பு மதிப்பு அதிகமாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பங்களா யுனைடெட் பிவ ரேஜஸ் நிறுவனத்துக்குச் சொந்த மானதாகும். கிங்பிஷர் நிறுவன கடனுக்காக வங்கிகளிடத்தில் இந்த பங்களா அடமானம் வைக்கப்பட் டிருந்தது. இந்த பங்களாவை வாங்க விருப்பம் உள்ள ஏலதாரர்கள் பார்ப் பதற்காக செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளிலும், அக்டோபர் 5-6 தேதி களிலும் திறந்து காட்டப்பட்டது.