வணிகம்

சுற்றுச் சூழலைப் பாதிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யில் கூடுதல் வரி: பிரிக்ஸ் மாநாட்டில் அருண் ஜேட்லி தகவல்

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். பசுமைக் குடில் விளைவுகளை கட்டுப்படுத்தும் பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களில் அருண் ஜேட்லி இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் இதர வரி விதிப்பு பொருட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்று தொடங்கிய பிரிக்ஸ் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி இதைக் குறிப்பிட்டார்.

மறைமுக வரியை அமல்படுத்த நாடு தயாராகிவருகிறது. இந்த நிலையில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களுக்கு விதிக்கப்படும் சராசரி வரியை விட, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகமாக இருக்கலாம். இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்த முன்வரைவு குறித்த ஆலோசனைகளுக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் அரசு இறுதி முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.

இந்தியாவில் ஏற்கெனவே நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் பொருட்களுக்கான வரி விதிப்பு சிறப்பாக உள்ளது. பருவநிலை பொருளாதாரத்தின் மூலம் வளங் களை பரவலாக்க வேண்டும். உறுதியான நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை அடைய வேண் டும் என்று குறிப்பிட்டார். பருவ நிலை மாற்ற பொருளா தாரத்துக்கு வளரும் நாடுகள் மிகப் பெரிய அர்பணிப்பணிப்புடன் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT