வணிகம்

வோடபோன் வரி விவகாரம்: மத்தியஸ்தர் ஆர்.சி. லஹோதி

செய்திப்பிரிவு

வோடபோன் நிறுவன வரி விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோதியை மத்தியஸ்தராக அரசு நியமித்துள்ளது.

அரசு தரப்பு மத்தியஸ்தராக லஹோதி நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார். வோடபோன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோடபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் பி.வி. நிறுவனம் கடந்த ஏப்ரலில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த பிரச்சினையில் பரஸ்பரம் முதலீட்டு காப்பு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியா, நெதர்லாந்து இடையே தீர்வு காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விவகாரத்துக்கு சமரச தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. 2007-ம் ஆண்டு ஹட்சிசன் வாம்போமா நிறுவன பங்குளை வாங்கியதில் அரசுக்குரிய வரியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

இதன்படி செலுத்த வேண்டிய வரித்தொகை ரூ. 7,990 கோடியாகும். இன்று அபராதம் மற்றும் வட்டி சேர்த்து செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT