வணிகம்

முட்டை உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும்: மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தனிநபர்களுக்கு தேவைப்படும் முட்டையின் அளவை பொருத்தவரை இந்தியா சர்வதேச சராசரிக்கு கீழ் இருப்பதாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார். மேலும் உள்நாட்டில் முட்டை உற்பத்தியை தற்போது இருக்கும் அளவை விட மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று உலக முட்டை தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் பேசியதாவது: மத்திய அரசு கோழி வளர்ப்பை பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நிதி உதவியையும் அளித்து வரு கிறது. முட்டை உற்பத்தியை பொருத்தவரை இந்தியா சர்வ தேச அளவில் 6-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 8,300 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போதைய நிலையில் ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு சராசரியாக 63 முட்டைகள் கிடைக்கின்றன. இருந்தபோதிலும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் புள்ளி விவரங்கள்படி ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு சராசரி யாக 180 முட்டைகள் தேவைப் படுகின்றன. அதனால் முட்டை உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். முட்டை உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசுக்கும், நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

கோழி வளர்ப்புக்கு சரியான விலை வழங்கப்பட்டால் முட்டை உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதற்கான கொள்கைகள் மற்றும் சரியான விலை கிடைக்கச் செய்வதன் மூலம் கோழி வளர்ப் பில் ஈடுபடுபவர்களை ஊக்கப் படுத்த வேண்டும். ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய வேண்டும் என்றால் முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி, முதிதேசியயோர் இல்லங்களில் முட்டை வழங்குவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

தேசிய கால்நடை திட்டம் மூலம் கோழி வளர்ப்பை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும் தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலும் கோழி வளர்ப்பு முறையை மத்திய அரசு ஊக்கப் படுத்தி வருகிறது. இவ்வாறு பிரதாப் மோகன் சிங் பேசினார்.

கடந்த 2014-15ம் ஆண்டில் இந்தியாவில் முட்டை உற்பத்தி 7,848 கோடி என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT