கடந்த பத்து வருடங்களில் முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் செயல்பாட்டு லாபம் ரூ.105 கோடியாக இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை உயர்வது மற்றும் எரிபொருள் கட்டணம் குறைவது ஆகிய காரணங்களால் பத்து வருடங்களில் முதல் முறையாக செயல்பாட்டு லாபத்தை ஏர் இந்தியா அடைந்திருக்கிறது.
கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் செயல்பாட்டு நஷ்டமாக ரூ.2,636 கோடி இருந்தது. கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு செயல்பாட்டு லாபத்தை அடைந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனமும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைந்த பிறகு முதல் முறையாக செயல்பாட்டு லாபம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2014-15-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த நிதி ஆண் டில் எரிபொருள் விலை 31 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 1.8 கோடி வாடிக்கையாளர்கள் ஏர் இந்தியாவில் பயணம் செய்திருக்கிறார்கள். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 6.6 சதவீதம் அதிகமாகும்.
இருந்தாலும் கடந்த நிதி ஆண் டில் வருமானம் சிறிதளவு குறைந் திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண் டின் வருமானம் ரூ.20,613 கோடி யாக இருந்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் ரூ.20,526 கோடி யாக இருக்கிறது.