பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் சார்பிலான முதலாவது வர்த்தகக் கண்காட்சி டெல்லியில் இம்மாதம் 12-ம் தேதி தொடங்க உள்ளது. பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு இந்த கண்காட்சிக்கான ஏற்பாட்டை செய்துள்ளது.
கோவாவில் பிரிக்ஸ் தலைவர் கள் சந்திக்கும் கூட்டம் இம்மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. அக்கூட்டத்துக்கு முன்பாக இந்த வர்த்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றபோது வர்த்தகக் கண்காட்சியை நடத்துவது உறுப்பு நாடுகளுக்கு பலனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்த வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. மொத்தம் 20 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு களை இங்கு காட்சிப்படுத்த உள்ளன.
குறிப்பாக ஏரோ ஸ்பேஸ், வேளாண் பதப்படுத்தல், ஆட்டோ மொபைல் மற்றும் ஆட்டோ மொபைல் உதிரிபாகம், ரசாயனம், சூழலுக்கு பாதிப்பில்லா எரிசக்தி உற்பத்தி, சுகாதாரம், மருந்து தயாரிப்பு, ரயில்வே, ஜவுளி, மற்றும் ஆயத்த ஆடை கட்டமைப்பு, தக வல் தொழில்நுட்பம், பொறியியல் பொருள்கள், சுற்றுலா, ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சி உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர ஒத்துவைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும் அழைக் கப்பட்டுள்ளனர். இந்நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
அக்டோபர் 13-ம் தேதி நடை பெற உள்ள வர்த்தக கூட்டத்தில் உறுப்பு நாடுகளிலிருந்து ஆயிரம் வர்த்தகர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.