வணிகம்

2016-ம் ஆண்டில் ஐபிஓ வெளியீடு: 293 கோடி டாலர் திரட்டிய 50 நிறுவனங்கள்

பிடிஐ

நடப்பாண்டில் ஐபிஓ மூலம் 50 நிறுவனங்கள் 293 கோடி டாலர் நிதி திரட்டியுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் அடுத்த அடுத்த மாதங்களின் பொதுப் பங்கு வெளியிட திட்டமிட்டு வருகின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே 50 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக் குள் மேலும் 22 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட நிதி 580 கோடி டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட நிதியை விட இரண்டு மடங்காகும். கடந்த ஆண்டு 218 கோடி டாலர் ஐபிஓ மூலம் திரட்டப்பட்டது.

பாக்கர் அண்ட் மெக்கென்ஸி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 293 கோடி டாலர் நிதி திரட்டப் பட்டுள்ளது. தொடர்ந்து 290 கோடி டாலர் திரட்டப்படும் என அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2017ம் ஆண்டில் வோடபோன் உட்பட 16 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 586 கோடி டாலர் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளன. நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனமும் ஐபிஓ வர உள்ளது.

இந்திய ஐபிஓ வரலாற்றில் இந்த ஆண்டு சிறப்பான ஆண் டாக அமைய மோடி அரசு முன் னெடுத்துவரும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் உள்பட பொரு ளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணமாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT