வணிகம்

நுகர்வோர் கடன் வசதி: மொபிக்விக் திட்டம்

பிடிஐ

செல்போன் வாலட் நிறுவனமான மொபிக்விக் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறு மற்றும் குறுகிய காலகடன் வசதியை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி பண்டிகைக் காலத்தில் பொருள் களை வாங்க இந்த கடன் அளிக்கப்படும். மொபிக் விக் வாலட்டில் கணக்கு வைத்துள்ள வாடிக்கை யாளர்கள் இத்தகைய கடன் வசதியைப் பெறலாம்.

கடன் தொகையை சுலபத் தவணையில் திரும்ப செலுத்தலாம்.30 நிமிடத்தில் கடன் அனுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை கடன் அளிக்கப்படும் என்று மொபிக்விக் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மொபிக்விக் வாலட்டை 3.5 கோடி மக்கள் பயன் படுத்துகின்றனர். 2009-ம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

SCROLL FOR NEXT