வணிகம்

இவரைத் தெரியுமா?- அரவிந்த் பாலி

செய்திப்பிரிவு

வீடியோகான் மொபைல் மற்றும் டெலிகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2008-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை இந்த நிறுவனத்தின் சர்வதேச சிபிடி அண்ட் கிளாஸஸ் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாக போலந்தில் பணியாற்றினார். இத்தாலிய ஆலையின் இயக்குநராகவும் இருந்தார்.

வீடியோகான் நிறுவனத்தின் நர்மதா கிளாஸ் பிரிவுக்கு பொது மேலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தொலைத்தொடர்பு, உற்பத்தி, மதிப்பு உருவாக்கம், சில்லரை வர்த்தக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தில் சந்தை மற்றும் தொழில் மேம்பாடு சார்ந்த பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.

பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டமும், புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொழில் மற்றும் நிதி மேலாண்மையியலில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT