சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் மற்றும் எரிசக்தி துறை நிறுவனமான ஏபிபி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த நிறுவனத்தின் ஆட்டோமேஷன் பிரிவுக்குத் தலைவராகவும், 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை கார்ப்பரேட் மேம்பாட்டு பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.
2001-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை ஏ.டி.கெர்னே இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ரோலாண்ட் பெர்கர் நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவின் தலைவராகவும், பேல்டார் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பையும் வகித்தவர்.
ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.