அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் அதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு வராது என ஹார்வேர்டு பேராசிரியர் கீதா கோபிநாத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் பெரிய அளவில் உயர்த்த வாய்ப்பு இல்லை. அதிக பட்சம் 0.25 சதவீதம் வரை வட்டி உயர்த்தப்படலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த வட்டி விகிதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. வட்டி விகிதம் உயர்வதால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டால் ஆச்சர்யமான விஷயம்தான். இருந்தாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கலாம்.
மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிதிக்கொள்கை, கடன் கொள்கை, சீர்திருத்தங்களை தொடருதல் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. தவிர நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறை வாக இருக்கிறது என்றார். நிதிக் கொள்கையால் பணப்புழக்கத்தை உயர்த்த முடியுமா என்று கேட்ட தற்கு, அனைத்து விஷயங் களுக்கும் எல்லைகள் இருக்கின் றன. நிதிக்கொள்கை மட்டுமே இதனை செய்ய முடியாது என் பதை அனைவரும் ஏற்றுக்கொள் வார்கள். ஐரோப்பிய நாடுகளில் வட்டி விகிதம் குறைவாக இருந் தாலும் அங்கு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வட்டிவிகிதம் போது மானதாக இல்லை. கட்டுமானத் துறையில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். தவிர தொடர்ந்து சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.
உலக பொருளாதாரத்தை பொருத்தவரை, அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் சரிவு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் இத்தாலி வங்கிகள் பிரச்சினையில் இருக்கின்றன. போர்ச்சுகல் அரசுக்கும் பிரச்சினைகள் உள்ளன. இந்த நாடுகள் இன்னும் மீண்டு வரவில்லை.
இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் பிரெக்ஸிட் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிரேசில் நாட்டிலும் சில பிரச்சினைகள் உள்ளன. சீனாவும் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதிக கடன் வளர்ச்சி அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் கடன் வளர்ச்சியால்தான் அந்த நாடு வளர்ந்தது. இந்த வளர்ச்சி நீடித்திருக்காது. வரலாற்றில் எப்போதெல்லாம் அதிக கடன் வளர்ச்சி விகிதம் இருந்ததோ அந்த வளர்ச்சி மோசமாகவே முடிந்திருக்கிறது. எப்போது நடக்கும் என தெரியவில்லை. இப்போது நடக்கலாம் அல்லது பிறகு நடக்கலாம் என்று கீதா கோபிநாத் கூறினார்.
கடந்த சில வருடங்களாகவே பூஜ்ஜியத்துக்கும் அருகில் அமெரிக்காவின் வட்டி விகிதம் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி இந்த வட்டி விகிதத்தை 0.25 முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. குறிப்பாக வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.