வணிகம்

திவால் சட்டம்: மேலும் பல வரைவு விதிகள் வெளியீடு

செய்திப்பிரிவு

திவால் சட்டத்தில் மேலும் பல வரைவு விதிகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. நிறுவனத் தலைவர்கள் திவாலா னால் எத்தகைய நடவடிக்கையை எடுப்பது ஆகியன குறித்த வரைவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டு அதை செயல்படுத்து வதற்காக மத்திய அரசு திவால் சட்ட வாரியத்தை (ஐபிபிஐ) உரு வாக்கியுள்ளது. வரைவு அறிக்கை களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு இது சட்டமாக்கப்படும்.

வரைவு திவால் மசோதா கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. தனி நபர், நிறுவனங்கள் கூட்டு நிறுவனங்கள் ஆகியன திவாலானால் அதை எப்படி செயல்படுத் துவது என்பதற்கான விதிமுறை களை இந்த வரைவுச் சட்டம் குறிப்பிட்டுள்ளது.

அரசு நேற்று வெளியிட்ட வரைவு விதிமுறைகளில், நிறுவன உயர் அதிகாரி திவாலானால் எப்படி செயல்படுத்துவது என்பதற் கான வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு விதிமுறைகளில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

இந்த வாரியம் 10 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இதில் நான்கு பேர் அரசாங்கத்தால் நிய மிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.-பிடிஐ

SCROLL FOR NEXT