ஆஸ்திரேலியாவின் தேசிய வங்கியில் (என்ஏபி) செயல் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பியுஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்புகள் இல்லாத செயல் இயக்குநராக இருப்பார். ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப் பெரிய நிதி நிறுவனமாக என்ஏபி விளங்குகிறது.
இப்போது என்ஏபி-யின் துணை நிறுவனமான நேஷனல் வெல்த் மேனேஜ்மென்ட் ஹோல்டிங்ஸில் பொறுப்புகள் இல்லாத செயல் இயக்குநராக உள்ளார். புதிய பொறுப்பை இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஏற்பார் என தெரிகிறது.
ஏற்கெனவே இப்பொறுப்பில் உள்ள ஜெஃப் டாம்லின்ஸன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். பியுஷ் குப்தா நியமனத்தை வங்கியின் தலைவர் மைக்கேல் சானே வெளியிட்டுள்ளார். நிதி நிர்வாகத்தில் எம்பிஏ பட்டத்தை ஹார்வர்ட் கல்லூரியில் பெற்றுள்ளார்.