தொழில் புரிவதற்கான சூழலை இந்தியா மேலும் மேம்படுத்தி முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நாடாக இருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்காக இந்தியா இப்போதே தயாராக வேண்டும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.
கொலம்பியா பல்கலைக்கழகத் தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: சீனாவில் தற் போது தொழிலாளர்களின் எண் ணிக்கை குறைந்து கொண்டே வரு கிறது. ஏற்கெனவே அங்கு அதிக சம்பளம் இருக்கும் சூழலில் சம்பளம் தொடர்ந்து அதிக ரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச நிறுவனங்கள் அடுத்த பத்தாண்டு களில் சீனாவை விட்டு வெளியேறி, சர்வதேச அளவில் சிறப்பாக செயல் படும் நாடுகளுக்குச் செல்லக்கூடும். இந்தச் சூழ்நிலையை இந்தியா தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறும்பட்சத்தில் இந்தியா ஒரு இயற்கையான தேர்வாக அந்த நிறுவனங்களுக்கு இருக்கும். இந்தச் சமயத்தில் பிரதமர் மோடிக்கு நான் கூறுவதெல்லாம், இந்தச் சூழ்நிலையை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில்புரிவதற்கான சூழலை மேம்படுத்தும்பட்சத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு நீடித்த நிலையான வளர்ச்சி இருக்கும்.
கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு சீர்திருத்தங்களை இந்தியா குறைத்துக் கொண்டுவிட்டது. அதன் காரணமாக 10 ஆண்டுகளை நாம் இழந்துவிட்டோம். இப்போது மீண்டும் சீர்திருத்தங்களைத் தொடர ஆரம்பித்திருக்கிறோம்.
வளர்ச்சி, வர்த்தகம் என எந்த அளவுகோல்களை எடுத்துக் கொண்டாலும் இந்தியா சீனாவை விட 15 வருடங்கள் பின்தங்கி இருக் கிறது. இந்தியா 1991-ம் ஆண்டு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால் சீனா அதற்கு 12 வருடங் களுக்கு முன்பே சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது.
இப்போது இந்தியாவின் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலர்கள் ஆகும். தற்போது நிலைமை மாறி வருகிறது. அந்நிய முதலீட்டை பெறும் நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. அடுத்த 15 வருடங்களில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக உயர இந்தியாவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு பனகாரியா தெரிவித்தார்.