செல்போன் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தியாவில் இஸட் 3 எனும் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 அங்குல திரை கொண்ட இந்த செல்போனின் விலை ரூ. 15,990 ஆகும். முதல் முறையாக பிளாக்பெர்ரி மேப்ஸ் இந்த போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2டி மேப்ஸ், உள்ளூர் தேடல் மற்றும் குரல்வழி வழிகாட்டி, ஜிபிஎஸ் வழிகாட்டி ஆகிய வசதிகளைக் கொண்டது.