மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர். 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
மஹாராஷ்டிர தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்.
2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை பிரிவின் இந்திய மேலாளராக இருந்தவர்.
1998-ம் ஆண்டிலிருந்து 2003-ம் ஆண்டு வரை முருகப்பா டியூப் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.
பஜாஜ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவின் மேலாளராக இருந்தவர்.
சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்.
ஆட்டோமொபைல் துறையில் 16 வருட பணி அனுபவம் கொண்டவர்.