வணிகம்

வாராக்கடன் பிரச்சினையால் வங்கிகளின் லாபம் குறைவது கவலை அளிக்கிறது: சர்வதேச செலாவணி நிதியம் அறிக்கை

பிடிஐ

இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவதால் நிகர லாபம் குறைந்துவருவது கவலை அளிக்கிறது என சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) கூறியிருக்கிறது. சரியான நேரத்தில் இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண் டும் என்று ஐஎம்எப் தெரிவித் திருக்கிறது.

மேலும் ஐஎம்எப் தெரிவித்திருப்ப தாவது: இந்தியா உள்ளிட்ட நாடு களில் உள்ள வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையால் லாபம் குறைந்துவருகிறது. தவிர கடன் வளர்ச்சி விகிதமும் குறைந்து கொண்டே இருக்கிறது. பல நாடு களில் இந்த பிரச்சினை இருந்தாலும் இந்தியாவில் இந்த பிரச்சினை சரி செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டி இருக்கிறது. இதனால் லாபம் பாதிக்கப்படுகிறது. இதனை நீக்கி தரமான வங்கி அமைப்பை உருவாக்க வேண்டும்.

இதற்குரிய நடவடிக்கை எடுக்கப் பட்டாலும் மேலும் கூடுதல் நட வடிக்கை தேவை. கொள்கை வகுப்பாளர்கள் சரியான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று ஐஎம்எப் கூறியிருக்கிறது.

SCROLL FOR NEXT