வணிகம்

அக்டோபர் 21-ல் டபிள்யூடிஓ வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்

பிடிஐ

உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) வர்த்தக அமைச்சர் கள் நிலையிலான கூட்டம் இம்மாதம் 21-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

கடந்த ஆண்டு நைரோபியில் 5 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் எவ்வித ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.

வளர்ச்சியடைந்த நாடுகள் அளிக்கும் மானிய உதவி குறித்து இந்தியா தனது கவலையைத் தெரிவித்திருந்தது. மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற தோகா சுற்று பேச்சு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு பேச்சை தொடர வேண்டும் என்பதாலும் நைரோபி பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் போனது.

தற்போது ஆஸ்லோவில் நடைபெற உள்ள கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

SCROLL FOR NEXT