வணிகம்

மியூச்சுவல் பண்டில் 5 கோடி முதலீட்டாளர்கள்

பிடிஐ

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர் களின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 29 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இணைந்துள்ளனர்.

2015-16 நிதியாண்டில் 59 லட்சம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர் களும், 2014-15-ம் நிதியாண்டில் 22 லட்சம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இணைந் துள்ளனர். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை முதலீட்டாளர் களின் கணக்குகளின் எண்ணிக் கையை வைத்து கணக்கிடப் படுகிறது.

இந்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பு (ஆம்பி) தகவல் படி 43 மியூச்சுவல் பண்ட் நிறு வனங்களில் 5,05,59,495 முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாத நிலவரப்படி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 4,76,63,024-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது அதிலும் குறிப்பாக சிறிய நகரங்களில் இருந்து ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் அதிக முதலீடு செய்ததன் காரணமாகவே முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT