இந்திய தொழிலதிபர் பல்வந்தர் சஹானி தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு 90 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.59 கோடி) தொகைக்கு துபாயில் லைசென்ஸ் எண்ணை ஏலத்தில் எடுத்துள்ளார்.
‘டி5’ என்ற லைசென்ஸ் எண்ணுக்குரிய ஏலம் கடந்த சனிக்கிழமை துபாய் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட தொழிலதிபர் பல்வந்தர் சஹானி தனது ரோல்ஸ் ராயிஸ் காருக்கு ‘டி5’ என்ற லைசென்ஸ் எண்ணை 90 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் ‘ஓ9’ என்ற எண்ணுக்குரிய லைசென்ஸ் 6 லட்சம் டாலருக்கு ஏலத் தில் எடுத்ததாக சஹானி தெரி வித்துள்ளார்.