வணிகம்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கக் கட்டணம் மாற்றி அமைப்பு

பிடிஐ

சுங்கச்சாவடிகளில் சில்லரை கொடுப்பதில் ஏற்படும் தாமதத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வுகாண மத்திய அரசு முடிவெடுத்திருக் கிறது. இதன்படி சுங்க கட்டணங்கள் முழுமைப்படுத்தபடும். அனைத்துக் கட்டணங்களையும் ஐந்து ரூபாயின் மடங்குகளாக மாற்றி அமைக்கப்படுவதாக சாலைப் போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசல், அதனால் கூடுதல் எரிபொருள் செலவு, சாலைகள் சரியில்லாத தால் அடிக்கடி வண்டியை நிறுத்த வேண்டி இருப்பது, சுங்க சாவடிகளில் சில்லரைத் தட்டுப்பாட்டால் ஏற்படும் காலதாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக ஆண்டுக்கு 2,130 கோடி டாலர் (சுமார் ரூ.1.4 லட்சம் கோடி) அளவுக்கு இந்தியாவில் நஷ்டம் ஏற்படுகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் சுங்கச் சாவடி கட்டணம் 5 ரூபாயின் மடங்குகளாக மாற்றி அமைக்கப்படும். முதல்கட்டமாக 26 சுங்கச் சாவடிகளில் இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். ஐந்து ரூபாயின் மடங்குக்கு மிக அருகில் இருக்கும் தொகைக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.

உதாரணத்துக்கு கட்டணம் 62 ரூபாய் என இருக்கும் பட்சத்தில் 60 ரூபாயாகவும், 68 ரூபாய் என இருக்கும் பட்சத்தில் 70 ரூபாயாகவும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் சுங்க சாவடிகளில் நீண்ட வரிசை கணிசமாகக் குறையும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தவிர பிரீபெய்டு கார்டு மூலம், கார்டினைக் காண்பித்து எளிதாக வாகனங்கள் செல்லும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்காக பிரத்யேக வரிசை 275 சுங்க சாவடிகளில் அமைக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT