வணிகம்

தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க தடை: நிலுவை தொகை செலுத்திவிட்டதாக அமைச்சர்செந்தில் பாலாஜி ட்வீட்

Ellusamy Karthik

தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின் பரிமாற்றங்களில் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மாநிலங்கள் சுமார் 5100 கோடி ரூபாய் கட்டணத்தை மின் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார். அதில் நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு இன்று (ஆகஸ்ட் 19) முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவை தொகையை மாநிலங்கள் விரைந்து செலுத்த தவறும் பட்சத்தில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும் என்ற அபாயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தமிழகம் செலுத்த வேண்டிய நிலுவை தொகை? தமிழகம் சார்பில் ரூ.900 கோடி நிலுவை தொகை செலுத்த வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே நிலுவை தொகை செலுத்த வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை அடுத்த சில நாட்களில் செலுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மின்சார விநியோகத்தில் எந்த சிக்கலும் இப்போதைக்கு இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம். தமிழகத்தின் நகர்புறத்தில் மின் நுகர்வு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிலுவை தொகை செலுத்திவிட்டதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ட்வீட்

இது தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது, “ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது.

ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL' இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை.

நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை.

சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை.

நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை.

சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை”.

SCROLL FOR NEXT