வணிகம்

உலக வங்கி கூட்டம்: ஜேட்லி பங்கேற்பு

பிடிஐ

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அரசு பயணமாக 7 நாட் களுக்கு அமெரிக்கா, கனடா நாடுக ளுக்கு சுற்றுபயணம் மேற்கொள் கிறார். இன்று புறப்படும் ஜேட்லி உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆண்டு கூட்டங் களில் கலந்து கொள்வதுடன், சர்வதேச முதலீட்டாளர்களையும் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ஜேட்லி அக்டோபர் 10 ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மதியம் கனடாவில் சர்வதேச முதலீட்டாளர்களை சந் திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள் ளார். அமெரிக்க பயணத்தில் வாஷிங்டனில் 3 நாட்கள் நடை பெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸூம் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டங்களில் சர்வதேச பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். முக்கியமாக ஆண்டுக் கூட்டத்தில் சர்வதேச செலாவணி அமைப்பின் ஒதுக்கீடு சீரமைப்பு, பரிவர்த்தனை மதிப்புகளில் நெகிழ்வுதன்மை, நிதியியல் கட்டமைப்பு, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறிய விவகாரம் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான வர்த்தக ஒத்துழைப்புகள் குறித்து பேச உள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT