வணிகம்

ஸ்நாப்டீல் தள்ளுபடி விற்பனை முதல் நாளில் 9 மடங்கு உயர்வு

பிடிஐ

இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப் டீல் நடத்திய தீபாவளிக்கு முந்தய தள்ளுபடி விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் 37 நிறுவனங்கள் சராசரியாக ரூ. 1 கோடி மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளன.

தனது இணையதளம் மூலமான விற்பனை தினசரி 9 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 80 சதவீத ஆர்டர்கள் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படுவதாக ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது. தீபாவளி விற்பனை முதல் நாளன்று சராசரியாக ரூ. 1 கோடிக்கும் மேலாக ஒவ்வொரு வர்த்தகருக்கும் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விற்பனை 20 மடங்கு அதிகரித்துள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. மெட்ரோ எனப்படும் பெரு நகரங்களைக் காட்டிலும் இங்கிருந்து அதிக ஆர்டர்கள் வரப்பெற்றுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேகாலயம், மிசோரம், கோவா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலிருந்து அதிக ஆர்டர்கள் வந்துள்ள தாக நிறுவனம் தெரிவித் துள்ளது. காலணிகளுக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிக்கப் பட்டதால் முதல் நாளன்று ஒரு லட்சம் காலணிகள் விற்பனையாகியுள்ளது.

வீட்டு உபயோகப் பொருள் களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளன. முதல் நாளன்றே 3 ஆயிரம் டன் அளவுக்கு எடை கொண்ட வீட்டு உபயோகப் பொருள்கள் அனுப்பப்பட்டுள் ளன. இந்த அளவுள்ள பொருள் களை எடுத்துச் செல்ல ஏ380 ரக விமானம் 20 தேவைப் படும்.

ரெட் மீ நோட் 3, ஐ போன் 6 எஸ், ஐபோன் 5 எஸ், எம்ஐ மாக்ஸ், லீ எகோ மாக்ஸ் 2, உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு அதிக அளவிலான கிராக்கி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி ஜே2 புரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜே3எஸ் ஆகிய மாடல்கள் அதிகம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர 1.2 டன் ஸ்பிளிட் ஏசி, டெல் மற்றும் ஏசர் லேப்டாப், கேனன் மற்றும் நிக்கான் கேமிராக்கள், சமையலறை பொருள்கள் குறிப்பாக ஜூஸர் மிக்ஸர், மிக்சர் கிரைண்டர், பிரஷர் குக்கர் உள்ளிட்டவற்றை வாங்கவும் ஆன்லைன மூலம் பதிவு செய்யப்பட்டன.

ஸ்நாப்டீல் நிறுவனம் ஜேபிஎல் எஸ்பி 350 சவுண்ட் பார், ஐபோன் 6 எஸ் (16ஜிபி), சாம்சங் கேலக்ஸி ஜே3, புளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி, ஏசர் விண்டோஸ் 10 டச் ஸ்கிரீன் 2 இன் 1 லேப்டாப் ஆகியன இரண்டாம் நாள் விற் பனைக்கான பட்டியலில் அதிக தள்ளுபடியுடன் இடம்பெற்றி ருந்தவை ஆகும்.

SCROLL FOR NEXT