வணிகம்

பிஎஸ்இ சந்தை மதிப்பு ரூ.113 லட்சம் கோடி

செய்திப்பிரிவு

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.113 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. வர்த்தகத்தின் இடையே ரூ.1,13,32,516 கோடியை தொட்டது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு ரூ.100 லட்சம் கோடி என்னும் இலக்கை தொட்டது. ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்திருப்பதால் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

சென்செக்ஸ் 91 புள்ளிகளும், நிப்டி 31 புள்ளிகளும் உயர்ந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. கேபிடல் குட்ஸ் துறையை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்தன. எண்ணெய் எரிவாயு குறியீடு 2.33 சதவீதமும், கட்டுமான குறியீடு 1.51 சதவீதமும், பிஎஸ்யூ குறியீடு 1.44 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி (5.21%), டாடா ஸ்டீல் (1.89%), டாடா மோட்டார்ஸ் (1.6%), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (1.59%) ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக கோல் இந்தியா, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஹெச்யூஎல் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

SCROLL FOR NEXT