ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான ரூப் அண்ட் புளோர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கௌரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிகளுக்காக நிறுவனத்தின் பல்வேறு முக்கிய பொறுப்பு களுக்கான தலைவர்களை நியமித் துள்ளது.
நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த கெளரி சங்கர் தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் இன்மொபி நிறுவனத்தின் மேலாண்மை குழுவில் இருந்தவர். மேலும் உயர் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான மென்கின்ஸி நிறுவ னத்தில் முக்கிய தலைவராகவும் பணியாற்றியுள்ளர்.
வருவாய் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் விதமாக விற்பனைப் பிரிவு தலைவராக டி.ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா பிராப்பர்டி டாட் காம், சுலேகா டாட் காம் நிறுவனங்களில் பணியாற்றியவர்.
நிறுவனத்தின் தலைமை சந்தைப் பிரிவு தலைவராக பிகாஷ் சௌத்ரி, சுதா பிரபு மற்றும் நிஷாந்த் காஷ்யப் ஆகியோர் சில பிரிவுகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல பொறியியல் பிரிவில் நிரேன் பாய், இமான் கல்யாண் பாண்டே ஆகியோர் தலைமைப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.