வணிகம்

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்: போர்ப்ஸ்

பிடிஐ

அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட் டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐந்து இந்திய-அமெரிக்கர்கள் இடம்பிடித்துள்ளனர். 400 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் 23-வது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

சிம்பொனி டெக்னாலஜி நிறுவனர் ரொமேஷ் வாத்வானி, சிண்டெல் பாரத் நிறுவனத்தின் இணை நிறுவனர் நீர்ஜா தேசாய், ஏர்லைன் துறையைச் சேர்ந்த ராகேஷ் கங்வால், தொழில் முனைவோர் ஜான் கபூர், சிலிகான் பள்ளத்தாக்கு ஏஞ்சல் முதலீட்டாளர் கவிதார்க் ராம் ராம் ஆகிய ஐந்து இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

முதலிடத்தில் உள்ள 60-வயது டைய பில்கேட்ஸின் மொத்த சொத்துமதிப்பு 81,000 கோடி டாலர். 69 வயதுடைய ரொமேஷ் வாத்வானி போர்ப்ஸ் பட்டியலில் 222-வது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்துமதிப்பு 300 கோடி டாலர். இவர் சிம்பொனி டெக்னாலஜி நிறுவனத்தின் தலை வர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்துவருகி றார். இந்த நிறுவனத்தின் வருமானம் 2,800 கோடி டாலர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

நீர்ஜா தேசாய் 2,500 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் 274-வது இடத்தில் உள்ளார். இவரது நிறுவனமான ஷிண்டெல் 1980-ம் ஆண்டு மிச்சிக்கனில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 95 கோடி டாலர் வரு மானம் ஈட்டக்கூடிய நிறுவன மாக வளர்ந்துள்ளது. அதுமட்டுமல்லா மல் சர்வதேச அளவில் 24,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

321-வது இடத்தில் உள்ள கங்வாலின் மொத்த சொத்து மதிப்பு 2,200 கோடி டாலர். இவர் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர். 335-வது இடத்தில் உள்ள தொழில் முனைவோரான கபூர் 2,100 கோடி சொத்து மதிப்பை கொண்டவர். ஆரம்ப காலத்தில் கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்வதவரான ராம் 361-வது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்துமதிப்பு 1,900 கோடி டாலர். தற்போது தனது ஷெர்பாலோ வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடு செய்துவருகிறார்.

SCROLL FOR NEXT