வணிகம்

2024-ல் வெளிநாட்டு சுற்றுலா மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடியாக உயரும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நங்கியா ஆண்டர்சன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த 2019-ல் இந்தியர்களின் வெளிநாட்டு சுற்றுலா மதிப்பு 22 பில்லியன் டாலராக (ரூ.1.74 லட்சம் கோடி) இருந்தது. கரோனா சமயத்தில் வெளிநாட்டுப் பயணம் முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில், 2021-ல் இந்தியர்களின் வெளிநாட்டு சுற்றுலா மதிப்பு 12.6 பில்லியன் டாலராக (ரூ.99 ஆயிரம் கோடி) குறைந்தது. தற்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் பணக்காரர்கள் மட்டுமன்றி நடுத்தர குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல் தொடங்கியுள்ளனர். இந்நிலையி,ல் 2024-ம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் சுற்றுலாவின் மதிப்பு 42 பில்லியன் டாலராக (ரூ.3.3 லட்சம் கோடி) உயரும். ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் பங்கு 20 சதவீதம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்களின் பங்கு 10 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT