வணிகம்

காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க ஜெர்மன் அமைப்புடன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

இந்திய காற்றாலை மின் உற்பத்தி யாளர் கூட்டமைப்பு (ஐடபிள்யூடி எம்ஏ) ஜெர்மனியின் மெசி ஹூசும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மரபுசாரா மின் உற்பத்தி திட்டங் களை மேம்படுத்தும் வகையில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்தோ - ஜெர்மன் மேம்பாட்டு கவுன்சில் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சென்னையில் நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஜெர்மனியின் மின்சாரம் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ராபர்ட் ஹபீக் கலந்து கொண்டு பேசும்போது இந்த ஒப்பந்தம் வெறுமனே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கானது மட்டுமல்ல. இரு நாடுகளிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கும் உதவும். மரபு சாரா எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற இரு நாடுகளின் இலக்கை எட்டவும் இது பயன்படும் என்று குறிப்பிட்டார்.

ஐடபிள்யூடிஎம்ஏ தலைவர் சர்வேஷ் குமார் பேசும்போது: இந்தியாவில் 60 ஜிகா வாட் காற்றாலை மின் உற்பத்திக்கான இலக்கு வைத்தும் 28 மெகாவாட் அளவுதான் காற்றாலை மின் உற்பத்தி நடக்கிறது. சுமார் 300 ஜிகாவாட் அளவு உற்பத்தி செய்யும் அளவுக்கான தொழில்நுட்ப திற மையை இந்தியாவில் வைத்துள் ளோம். எனவே இந்த ஒப்பந்தம் மூலம் காற்றாலை மின்னுற்பத்தி சார்ந்த விழிப்புணர்வை இந்தியா வில் ஏற்படுத்த முடியும். இதன் மூலம் இந்தியாவில் காற்றாலை மின்னுற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றார்.

SCROLL FOR NEXT