கர்நாடகாவில் செயல்பட்டு வரும் பிஎஸ்எஸ் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கோடக் மஹிந்திரா வங்கி கையகப்படுத்தி இருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.139.2 கோடியாகும்.
மைக்ரோபைனான்ஸ் நிறுவ னத்தின் வழிமுறைகள், நிர்வாக குழு, குறைவான வாராக்கடன் ஆகியவை அந்த நிறுவனத்துக்கு சாதகமாகும். நிதிப் பிரச்சினை களை மட்டும் சந்தித்த அந்த நிறு வனத்துக்கு இனி அந்த பிரச்சி னையும் இருக்காது என்று கோடக் மஹிந்திரா வங்கியின் வர்த்தக வங்கி பிரிவுத் தலைவர் நாராய ணன் தெரிவித்தார்.
மேலும் கோடக் மஹிந் திரா வங்கி நேரடியாக மைக்ரோ பைனான்ஸ் பிரிவில் இல்லை. இந்த பிரிவு கடந்த வருடம் 80 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இந்த நிறுவனத்தின் கடன் வழங்கும் அளவு 30 சதவீதம் உயர்ந்து 483 கோடியாக இருக்கிறது.
அதேபோல வாராக்கடன் மிகக் குறைந்த அளவாக 0.003 சதவீதமாக இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் செயல் பட்டு வரும் இந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் மஹா ராஷ்டிராவில் விரிவு படுத்தி யது. தவிர மத்திய பிரதேசத் திலும் விரிவு படுத்த திட்டமிட்டி ருக்கிறது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் பெல்லம்மொண்டா வசம் இருக்கும் 99.49 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறோம். மைக் ரோபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் வசம் 0.5 சதவீத பங்குகள் இருக்கிறது. அந்த பங்குகளை வாங்குவதற்கும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்று நாராயணன் குறிப்பிட்டார்.
தற்போதைய இயக்குநர் குழு, தலைமைச் செயல் அதிகாரி, தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, மனிதவள அதிகாரி மற்றும் 730 பணியாளர்கள் அப்படியே தொடருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோடக் மஹிந்திரா வங்கி கடந்த வருடம் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை இணைத்தது குறிப் பிடத்தக்கது. முன்னதாக கிராம விடியல் மைக் ரோபைனான்ஸ் நிறுவனத்தை ஐடிஎப்சி வங்கி வாங்கியது குறிப்பிடத்தக்கது.