உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. ஆனால் உலக வங்கி வெளியிட்ட தொழில் புரிவதற்கான சாதகமான நாடுகள் தர வரிசை பட்டியல் 130வது இடத்தில் உள்ளது.
சிறு முதலீட்டாளர்களை பாது காக்கும் விஷயத்தில் நியூஸிலாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதலிடங்களில் உள்ளன. இதற் கடுத்து இந்தியாவைவிட முன் னிலையில் ஹாங்காங், மலேசியா, கஜகஸ்தான், இங்கிலாந்து, கனடா, நார்வே, சவுதி அரேபியா, ஸ்லோவேனியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.
தனிப்பட்ட ஆதாயத்துக்காக நிறுவன இயக்குநர்கள் முதலீட் டாளர்களை தவறாக கையளு வதிலிருந்து பாதுகாப்பது மற்றும் முதலீட்டாளர்களின் சமூக பொறுப்புணர்வு குறித்த உரிமை மற்றும் பங்கு குறித்தும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியா தனது பல ஆண்டு களுக்கு முன்பிருந்த கொள்கை களிலிருந்து விடுபடுகிறது. நிறுவனச் சட்டங்களிலிருந்து வெளியே வருகிறது. இந்திய நிறுவனங்கள் தொடர்ச்சியாக சர்வதேச தரத்துக்கு வந்து கொண் டிருக்கின்றன. குறிப்பாக தங்களது பொறுப்பு குறித்த மரியாதை மற்றும் சமூக பொறுப்புணர்வுக்கான செயல் பாடுகள், வளங்களை பரவ லாக்குவது மற்றும் சட்டரீதியாக சமூக பொறுப்புணர்வு தேவை என்பதையும் உணர்ந்துள்ளன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.