வணிகம்

ரூ. 14,700 கோடி வரி வருவாய்: நொமுரா கணிப்பு

பிடிஐ

தாமாக முன்வந்து கருப்புப் பணத்தைத் தெரிவிக்கும் (ஐடிஎஸ்) திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 14,700 கோடி வரி வருமானம் கிடைக்கும் என நிதி அமைப்பான நொமுரா கணித்துள்ளது.

இவ்விதம் வசூலாகும் தொகை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பாதித் தொகை நடப்பு நிதி ஆண்டிலும் எஞ்சிய பாதித் தொகை அடுத்த நிதி ஆண்டிலும் வசூலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.65,200 கோடி தொகை கணக்கில் காட்டப்பட்டுள் ளது. இதில் 45 சதவீத வரி மற்றும் அபராதத் தொகை ரூ.29,400 கோடி யாகும். இந்தத் தொகையானது மூன்று தவணைகளில் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நவம் பர் மாதத்தில் 25%-மும், மார்ச் மாதத் தில் 25%-மும் செலுத்த வேண் டும். எஞ்சிய 50% தொகை அடுத்த நிதி ஆண்டில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT