வணிகம்

செப்டம்பரில் அந்நிய முதலீடு ரூ.20,000 கோடி

செய்திப்பிரிவு

கடந்த செப்டம்பரில் இந்திய சந்தைக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் அந்நிய முதலீடு வந் துள்ளது. கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த தொகை அதிகமாகும்.

அந்நிய முதலீட்டாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய செபி அனுமதி வழங்கி இருப்பதால் இந்த முதலீடு மேலும் உயரும் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தையில் 10,443 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் ரூ.9,789 கோடி முதலீடும் வந்துள்ளது. மொத்த முதலீடு ரூ.20,233 கோடியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT