வணிகம்

ஜியோ இலவச அழைப்பு சேவைக்கு டிராய் அனுமதி

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்பு சேவைக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் (டிராய்) அனுமதி அளித்துள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை இலவச அழைப்பு சேவைக்கு டிராய் அனுமதி அளித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலவச அழைப்புகள், இலவச இணையதள சேவை எனப் பல்வேறு அறிவிப்புகளுடன் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும் இலவச அழைப்பு களை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்தது.

ஆனால் பார்தி ஏர்டெல், வோட போன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரிலை யன்ஸ் ஜியோ கட்டண விதிகளை மீறுவதாக டிராய் அமைப்பிடம் புகார் செய்தது. இந்த புகாரை ஆய்வுசெய்த டிராய், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினுடைய இலவச சலுகைக்கு 90 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று கூறியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ டிராய் அமைப்பிடம் தாக்கல் செய்த கட்டண திட்டத்தில் வாழ்நாள் முழுதும் இலவச அழைப்பு வழங் கப்படும் என்று தெரிவிக்க வில்லை. கட்டண திட்டத்தில் ஒரு விநாடிக்கு 2 பைசா என்று குறிப்பிட் டிருக்கிறது. விளம்பரப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த இலவச அழைப்புகளை அணுகமுடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிராய் அனுமதி வழங்கியதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வர வேற்றுள்ளது. மேலும் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாக சிம்கார்டு வாங் கியவர்கள், இலவச அழைப்புகள் மற்றும் இண்டர்நெட் இணைப்பு சேவையை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

ஜியோ வேகம் குறைவு

4ஜி நெட்வொர்க்கில் ரிலை யன்ஸ் ஜியோ இணையத்தின் வேகம் குறைவாக உள்ளது என்று டிராய் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

டிராய் அமைப்பு தகவலின்படி ஏர்டெல் நிறுவனம்தான் இணைய வேகத்தில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இதனுடைய பதிவிறக்க வேகம் 11.4 எம்பிபிஎஸ். இரண்டாம் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் 7.9 எம்பிபிஎஸ். 7.6 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் ஐடியா மூன்றாவது இடத்திலும் 7.3 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் நான்காவது இடத்தில் வோடபோன் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பதிவிறக்க வேகம் 6.3 எம்பிபிஎஸ்.

பதிவேற்ற வேகத்தில் 2.4 எம்பிபிஎஸ் வேகத்துடன் ரிலை யன்ஸ் ஜியோ நான்காவது இடத் தில் உள்ளது. பதிவேற்ற வேகத்தில் ஐடியா நிறுவனம் (4.1 எம்பிபிஎஸ்) முதலிடத்தில் உள்ளது. 4.0 எம்பி பிஎஸ் பதிவேற்ற வேகத்துடன் வோடபோன் இரண்டாவது இடத்தி லும் 3.7 எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 2.1 எம்பிபிஎஸ் வேகத் துடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT