வணிகம்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

செய்திப்பிரிவு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 2,177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று (ஆக.1) எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்தன. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பால் இன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒன்று ரூ.2,141க்கு விற்கப்படும். வீட்டு உபயோக சிலிண்டர் பழைய விலையான ரூ.1068-க்கு விற்கப்படும்.

SCROLL FOR NEXT