வணிகம்

டிரேட் மார்க் வழக்கு: ஆச்சி மசாலாவுக்கு சாதகமாக அமெரிக்காவில் தீர்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனம் 1995-ம் ஆண்டு டிரேட் மார்க் உரிமத்தை பெற்றுவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் ஃபுட்ஸ் என்னும் பெயரில் அமெரிக்காவிலும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கடந்த 2013-ம் ஆண்டு ஆச்சி ஆப்பக்கடை என்னும் உணவகத்தை கலிபோர்னியாவில் ராஜூ காளிதாஸ் என்பவர் தொடங்கி இருக்கிறார். இதனை எதிர்த்து ஆச்சி மசாலா தொடர்ந்த வழக்கில் ஆச்சி மசாலாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆச்சி என்னும் பெயரில் மசாலா மற்றும் உணவுப்பொருட்களை அமெரிக்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆச்சி மசாலா விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆச்சி என்பது பொதுவான பெயர், மசாலா பொருட்களும் உணவும் வேறுவேறு, ஆச்சி என்னும் பெயருடன் ஆப்பக்கடை சேர்ந்திருப்பதால், ஆச்சி மசாலாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்னும் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆச்சி ஆப்பக்கடை என்னும் பெயருக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

SCROLL FOR NEXT