வணிகம்

வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு (ஜூலை 31) முடிகிறது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சென்ற ஆண்டில் டிசம்பர் 31 வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (ஜூலை 28) மட்டும் 36 லட்சம் பேர் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்தனர் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரையில் 4.09 கோடி பேர் ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. ஜூலை 25-ம் தேதி நிலவரப்படி 3 கோடி பேர் ரிட்டர்ன் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அடுத்த மூன்று தினங்களில் மட்டும் கூடுதலாக 1 கோடி பேர் ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT